"அதை பார்த்து துடித்துப் போய்விட்டேன்." அமைச்சர் துரைமுருகன் பேட்டி.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தின் பாலக்காடு பகுதியில் பரம்பிக்குளம் அணை இருக்கிறது. இந்த அணையின் ஷட்டர் செயின் அறுந்து விழுந்துள்ளது. இதனால், அணையில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது. 

இதனை அமைச்சர் துரைமுருகன், செந்தில் பாலாஜி மற்றும் நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சசேனா ஆகியோர் பரம்பிக்குளம் அணை உடைந்துள்ள பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அதன் பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் தண்ணீர் வீணாகும் காட்சி தன்னை வேதனைப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியபோது, '' சோகம் என்னவென்றால் வினாடிக்கு 16 ஆயிரத்து 500 கன அடி வெளியேறுகிறது. காலையிலிருந்து 20,000-க்கும் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி விட்டதாக கூறுகின்றனர். 

இந்த தண்ணீர் வீணாக வெளியேறுகின்ற காட்சியை பார்க்கும் பொழுது மனம் வேதனையில் துடித்து போய்விட்டது. இந்த தண்ணீர் வடிந்து பின்னர் தான் அதில் வேலை செய்ய முடியும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan Press meet after seen parambikulam Dam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->