ஈபிஎஸ்-க்கு அடுத்த சிக்கல்! ஊழல் வழக்கில் மேல் முறையீடு! பரபரக்கும் அரசியல் களம்! - Seithipunal
Seithipunal


முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலை துறையில் டெண்டர் கோரியதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக கூறி அளித்த புகாரின் மீது சிபிஐ விசாரணை குழு அமைக்குமாறு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

இதை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் சிபிஐ விசாரணைக்கு அவசியம் இல்லை எனக் கூறி தீர்ப்பு வழங்கியது. இந்தநிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜூலை 18ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு ஊழல் கண்காணிப்பு துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த விவகாரத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யும்போது தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என ஈபிஎஸ் தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DVAC appeals to Supreme Court against EPS


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->