முன்னாள் எம்எல்ஏ சத்திய நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! - Seithipunal
Seithipunal


அதிமுகவை சேர்ந்த முன்னாள் தி.நகர் சட்டமன்ற உறுப்பினர் சத்திய நாராயணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை தியாகராய நகர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்த சத்திய நாராயணன் தொகுதி மேம்பாட்டு நிதியை செலவழித்ததில் முறைகேடு செய்ததாக ராயபுரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அரவிந்தாக்ஷன் என்பவர், லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்திருந்தார்.

குறிப்பாக மேற்கு மாம்பலம் பகுதியில் அம்மா உள்விளையாட்டு அரங்கம் கட்ட 2016-2017ம் நிதியாண்டில் 5 கட்டங்களாக நிதி ஒதுக்கி ஒரு கோடி ரூபாய் செலவு செய்ததில் முறைகேடு செய்ததாகவும், 2018-2019ம் நிதியாண்டில் மேற்கு மாம்பலம், காசி குளம் பகுதியில் கட்டிடமே கட்டாமல் 30 லட்சம் செலவு செய்தது குறித்தும், 2017-2018ம் நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் சட்டத்திற்கும், அரசாணைக்கும் புறம்பாக 2 கோடி ரூபாய்க்கு வெறும் சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே மேற்கொண்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதே காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு சென்னையில் 16 இடங்களும், கோயம்புத்தூரில் ஒரு இடமும், திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு இடத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்று தமிழகம் முழுவதும் மணல் குவாரி டெண்டர் முறைகேடு தொடர்புடைய அரசு அதிகாரிகள் ஒப்பந்ததாரர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட நிலையில் இன்று அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DVAC raids AIADMK former MLA Sathya Narayanan house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->