அதிமுகவின் மிக முக்கிய திருப்பம்! இன்னும் 48 மணி நேரம்! வெளியான பரபரப்பு செய்தி!
EC Meet For ADMK and GS EPS
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டதின் ஆவணங்கள், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் ஆவணங்கள், உச்சநீதிமன்ற-உயர்நீதிமன்ற தீர்ப்புகள் நகல்கள் உள்ளிட்டவைகளை தலைமை தேர்தல் ஆணையம் அங்ககரிக்க உத்தரவிட கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு முடிவெடுக்க பத்து நாட்கள் அவகாசம் வழங்கி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.
நீதிமன்றம் வழங்கிய இந்த கால அவகாசம் வருகிற 22 ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல், ஓபிஎஸ் நீக்கம் குறித்து தேர்தல் ஆணையம் நாளை ஆலோசனை நடத்த உள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஆனூப் சந்திர பாண்டே, ஆகியோர் ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின், நாளை அல்லது நாளை மறுநாள் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, இன்று காலை அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார். அவரின் அந்த மனுவில், "நான் தான் அதிமுகவின் ஒருங்கிணைப்பார்" என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
English Summary
EC Meet For ADMK and GS EPS