ஜி.கே வாசகனுக்கு சைக்கிள் கிடைக்குமா? ட்விஸ்ட் வைத்த தேர்தல் ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி கே வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தல் மற்றும் அதனை தொடர்ந்து நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டது போன்று எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலிலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனு இது இந்திய தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யாததால் தனது மறு மீது பரிசினை செய்து முடிவு எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று இந்திய தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த பதில் மனுவில் நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பாக தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனு மீது முடிவெடுத்து அறிவிக்கப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ec Said TMC cycle symbol allocation decide before election


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->