ஆரத்தி எடுக்க பணம்? வீடியோவில் சிக்கிய அண்ணாமலை... மாஸ்டர் ப்ளான்.!!
ECI starts investigation regards Annamalai give money to voter
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தபோது ஓட்டுக்காக ஒத்த ரூபாய் கூட கொடுக்கப் போவதில்லை மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறேன் என வீராப்பாக பேசி இருந்தார்.
இவர் பேசிய அடுத்த நாளே கோவையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த அண்ணாமலையை ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்ணுக்கு அவர் ரகசியமாக பணம் தந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.
இந்த வீடியோவை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஒருவர் "மிஸ்டர் அண்ணாமலை, உங்களுக்கு வெக்கமே இல்லையா வாக்கிற்கு பணம் தந்ததே இல்லைன்னு சொல்லிட்டு, ஆரத்தி எடுத்தவருக்கு கூட பணத்தை மறைத்து கொடுக்கறீங்க. இதுதான் உங்க மாற்று அரசியலா அண்ணாமலை? எனக் கேள்வி எழுப்பியதோடு இந்திய தேர்தல நாணயம் மற்றும் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியிடமும் கோர்த்து விட்டுள்ளார்.
இதனைப் பார்த்த கோவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அதிகாரியுமான மனோஜ் குமார் "இந்த வீடியோ குறித்தான உண்மை தன்மையை ஆராய நடவடிக்கை எடுத்து உள்ளோம் இந்த வீடியோ காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது" என பதில் அளித்துள்ளார்.
ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்தபோது அண்ணாமலையின் வேடமனவை ஏற்க கூடாது என எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அவர் இரண்டு வேட்பு மனுக்களை அண்ணாமலை தாக்கல் செய்ததாகவும் அதில் ஒன்று சரியாக இருப்பதால் வேட்டு மனதை ஏற்றுக் கண்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த சர்ச்சை அடங்குவதற்குள் அண்ணாமலை ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் கொடுத்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதற்கிடையே தனக்கு தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை எனவும், டெல்லி தலைமை கேட்டுக் கொண்டதால் கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதாகவும் அண்ணாமலை கூறியிருந்தது தற்போது நினைவுக்கு வருகிறது. ஒருவேளை தன்னை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்வதற்காகவே அண்ணாமலை இதுபோன்று செய்கிறாரா? என இணையதள வாசிகள் கேள்வி எழுப்ப மறக்கவில்லை.
English Summary
ECI starts investigation regards Annamalai give money to voter