செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் சிக்கியது என்ன.? EDயின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ.!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தற்பொழுது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கரின் வீடு மற்றும் செங்குந்தபுரம் சாலையில் உள்ள நிதி நிறுவன அலுவலகம், சின்னாண்டங்கோயில் சாலையில் உள்ள தனலட்சுமி கிரானைட் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதேபோன்று கரூர் - மதுரை நெடுஞ்சாலையில் அம்பாள் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் சண்முகத்தின் வீட்டில் துணை ராணுவ வீரர்களின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் பூட்டை உடைத்து சோதனை செய்தனர்.

மேலும் கோவை ராமநாதபுரத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் முத்துபாலன் என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இவ்வாறு கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி மட்டும் 9 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

அதே போன்று திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக நிர்வாகி சாமிநாதன் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். இவர் வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வரும் நிலையில் டாஸ்மாக் பாரில் பணம் வசூல் செய்து செந்தில் பாலாஜிக்கு வழங்கி வந்ததாக குற்றம் சாட்டப்பட்டதன் அடிப்படையில் அமலாக்க துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

அதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள சாமிநாதனின் உறவினர் காளியப்பன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

இந்த நிலையில் சோதனை தொடர்பாக அமலாக்க துறையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் "03/08/2023 அன்று பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் திரு.செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்த சோதனையில், ரூ. 22 லட்சம் பணம் மற்றும் ரூ. 60 லட்சம் மதிப்பிலான கணக்கில் வராத சொத்து ஆவணங்களுடன் ரூ16.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது" என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED announced documents seized from Senthil Balaji aides house


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->