முதலமைச்சர் ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா - எடப்பாடி கே பழனிசாமி விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன் துபாய் பயணம் குறித்து, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் பயணம் குடும்ப சுற்றுலா போல் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.

சேலம் : ஓமலூரில் உள்ள அதிமுக அலுவலகத்தில் உட்கட்சித் தேர்தல் பணிகளை பார்வையிட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி கே பழனிசாமி தெரிவிக்கையில்,

"நான் முதலமைச்சராக இருந்த போது வெளிநாடு சென்றதை அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த முகஸ்டாலின் விமர்சித்திருந்தார்.

தற்போது, ஸ்டாலினின் துபாய் பயணம் தொழில் முதலீட்டை ஈர்க்க அல்ல, சுற்றுலா போல் உள்ளது என்று ஸ்டாலினை பார்த்து மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணை சரிவர நடைபெறவில்லை எனில், சிபிஐ விசாரணை கோருவோம்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் இன்று மூன்றாவது நாளாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi k palanisami say about stalin dubai trip


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->