மாட்டிக்கிட்டான்!!! SI கொலை வழக்கில் புதிய திருப்பம்!!! துப்பாக்கிச் சூடு நடத்தி குற்றவாளியை பிடித்த காவல்துறை...! - Seithipunal
Seithipunal


நெல்லையில் நேற்று,மறைந்த மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களுக்கு பாதுகாப்பு அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் 'ஜாகீர் உசேன் பிஜிலி' வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.பட்டபகலில் நிகழ்ந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக 2 பேர் நீதிமன்றத்தில்  சரணடைந்தனர்.

இந்த கொலை தொடர்பாக டவுன் காவலர்கள்  வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இதனிடையே, ஜாகிர் உசேன் உயிரோடு இருந்தபோது தனது முகப்புத்தக  பக்கத்தில் 'கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்' என்பவரால் தனது உயிருக்கு ஆபத்துள்ளது என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஓய்வுபெற்ற காவலர் ஜாகிர் உசேன் கொலை வழக்கு குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தி என்கிற தெளபிக்கை துப்பாக்கிச்சூடு நடத்தி காவல்துறை இன்று பிடித்தது.

மேலும் நெல்லை ரெட்டியார்ப்பட்டியில் பதுங்கியிருந்த குற்றவாளி முகமது தௌபிக் பிடிக்கச்சென்ற போது தலைமைக்காவலர் ஆனந்தை அவர் அரிவாளால் வெட்டமுயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து கிருஷ்ண மூர்த்தியை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.இந்தத் தகவல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.இன்னும் இதைப்பற்றிய விசாரணையை காவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SI murder case Police open fire and catch the criminal


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->