விண்வெளியில் 9 மாதங்கள்! பூமிக்கு திரும்பிய இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்ஸ் - ராஜ்நாத் சிங் பெருமிதம்!
Sunita Williams Rajnath Singh NASA
விண்வெளியில் 9 மாதங்கள் சிக்கிய இந்திய வம்சாவளி வீராங்கனை – பூமிக்கு திரும்பிய கணிப்பு தருணம்!
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கான பயணத்தில் ஏற்பட்ட தடங்கல்கள், 9 மாத தாமதத்துக்குப் பின்னர், வீரர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பிய அதிசயம்!
2023 ஜூன் – அமெரிக்க விண்வெளி நிறுவனம் நாசா அனுப்பிய போயிங் ஸ்டார்லைனர் விண்கலம், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குக் கொண்டு சென்றது.
8 நாட்கள் தங்கி திரும்ப வேண்டிய அவர்களுக்கு பெரும் சிக்கல்!
விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்டபடி பூமிக்கு திரும்ப முடியவில்லை.
தொடர் முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால், விண்வெளி நிலையத்திலேயே 9 மாதங்கள் இருப்பதைத் தவிர்க்க முடியாத நிலை.
இந்த நிலையில், இன்று அதிகாலை டிராகன் விண்கலம் மூலம் வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில், “இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்ஸ் உட்பட குழுவினர், மனித சகிப்புத்தன்மை மற்றும் விடாமுயற்சியின் வரலாற்றை எழுதினர். அவரது தைரியம், அர்ப்பணிப்பு, மன உறுதி மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கிறது” எனப் புகழாரம் சூட்டினார்.
English Summary
Sunita Williams Rajnath Singh NASA