கடந்த முறை நடந்தது இந்த முறை நடக்கக்கூடாது.. எடப்பாடி பழனிசாமியின் புதிய பிளான்.!! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தீவிரமடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒற்றைத் தலைமையை கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஓ பன்னீர்செல்வம் தரப்பு இரட்டைத் தலைமை தொடர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிப்பதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் தீவிரமாக செய்துவருகின்றனர். 

கடந்த கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படவில்லை. ஆகையால், 11 ஆம் தேதி (இன்று) நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு உண்டான அனைத்து முயற்சிகளையும் ஓ பன்னீர்செல்வம் தரப்பு மேற்கொண்டு வருகிறது. ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து பொதுக்குழுவிற்கு தடை கோரி மனு தாக்கல் செய்து வந்தனர். அனைத்து மனு மீதும் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு ஆதரவாக உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று பொதுக்குழு நடைபெற உள்ளது. இன்று காலை 9.15 மணிக்கு திட்டமிட்டபடி பொதுக்குழு நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக தெரிவித்துள்ளனர். மேலும், நுழைவு வாயிலில் 16 பரிசோதனை ஸ்கேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பொதுக்குழு நடைபெறும் வானகரம், ஸ்ரீவாரு மண்டபத்துக்கு பிரசார வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டார். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வானகரம் புறப்பட்டார். கடந்த முறை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், இந்தமுறை முன்னதாகவே புறப்பட்டார். வழி நெடுகிலும் ஈபிஎஸ்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy going to vanagaram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->