அதிமுக பொதுச் செயலாளர் - தொண்டர்களுக்கு உத்தரவிட்ட எடப்பாடி கே பழனிச்சாமி.! வெளியான தகவல்.!  - Seithipunal
Seithipunal


"ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக போஸ்டர் ஒட்ட வேண்டாம்" என்று தொண்டர்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நேற்று அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஒற்றை தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. 

அதிமுகவின் இந்த ஒற்றை தலைமை விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சற்றுமுன் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த வந்துள்ளார்.

அதே சமயத்தில், சேலம் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மூத்த நிர்வாகிகள் உடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

எடப்பாடி பழனிச்சாமியின் இல்லம் முன்பு குவிந்துள்ள தொண்டர்கள் அவரை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றும், ஒற்றை தலைமை என்றும் கோஷமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், "பொதுச் செயலாளர் என முழக்கம் எழுப்ப வேண்டாம்" என்றும், "ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக போஸ்டர் ஒட்ட வேண்டாம்" என்றும் தொண்டர்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EdappadiPalanisamy ADMK SALEM TAMILNADU


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->