மக்களவை தேர்தல் கூட்டணி..? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!
election alliance Premalatha Vijayakanth interview
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்க வந்த பிரேமலதா முதலில் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி விட்டு பிறகு பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்திருப்பதாவது,
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தங்களது சொந்த கருத்துக்களை மாவட்ட செயலாளர் பகிர்ந்தனர். மேலும் சிலர் தனித்துப் போட்டியிடுவோம் என தெரிவித்தனர்.
இதுவரை தேர்தல் கூட்டணி குறித்து பேசவில்லை. இனிமேல் கூட்டணி அமைத்து பேசுவோம். வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன் நிச்சயமாக கூட்டணி அமைக்கப்படும்.
மேலும் விஜய பிரபாகரன் ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
election alliance Premalatha Vijayakanth interview