48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை தேர்தல் ஆணையம் அதிரடி!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் பாரதிய ராஷ்ட்ர கட்சி குறித்து அவதூறு கருத்துகளை தெரிவித்தாக புகார் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் சந்திரசேகர் ராவ் 48 மணி நேரம் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில்,  தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஏப்ரல் ஐந்தாம் தேதி அன்று சிர்சிலாவில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய சந்திரசேகராவ் அவதூறு கருத்துக்களை வன்மையாக கண்டிப்போடு அவரின் தவறான நடத்தைக்காக அவர் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்படுகிறது.

அதன்படி மே1 தேதி இரவு 8 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் சந்திரசேகர் ராவ் பிரச்சாரம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Commission has taken action to ban campaigning for 48 hours


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->