#திடீர்திருப்பம் | பிளானை மாற்றிய எடப்பாடி பழனிசாமி - போலீசுக்கே தண்ணி கட்டிய சம்பவம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில், ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று, அதிமுகவின் தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில், இன்று காலை (புதன் கிழமை) சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் N. தளவாய்சுந்தரம், ஆதிராஜாராம் ஆகியோர் நேரில் மனு அளித்தனர்.

ஆனால், போராட்டத்திற்கு போலீசார் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி அதிமுக எம்எல்ஏ.,க்கள் போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியது. இதன் காரணமாக வள்ளுவர் கோட்டத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பிளானை மாற்றி, இபிஎஸ் தலையில் சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து ஜெயலலிதா நினைவிட பகுதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS ADMK MLAs protest plan change police info


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->