பூட்டிய மாட்டு வண்டியில.. வேட்டிய மடிச்சு கட்டி.‌.. சேலத்தை கலக்கிய எடப்பாடி பழனிச்சாமி.!! - Seithipunal
Seithipunal


தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து தமிழர்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவிப்பதோடு தங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டமங்கலம் பனங்காட்டூர் மாரியம்மன் கோவில் திடலில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டார்.

அதிமுக கொடி வண்ணத்தில் வண்ணம் தீட்டப்பட்ட வண்டியில் பூட்டப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்ற எடப்பாடி பழனிச்சாமி மக்களோடு மக்களாக கலந்து கொண்டு பொங்கல் விழாவை சிறப்பித்தார். இந்த விழாவில் ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாட்டு வண்டியில் பொங்கல் விழாவிற்காக பயணம் செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eps celebrate pongal with Salem people


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->