ஸ்டாலினுக்கு மரபு தெரியவில்லை.. ஆளுநர் முன்பு பேசியது அநாகரிகம்.. எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையின் 2023ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் ஆரக்ஷர்.என் ரவியின் உரையுடன் தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே ஆளுநரின் செயல் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி உள்ளது. தமிழக அரசால் வழங்கப்பட்ட ஆளுநர் உரையில் சில பகுதிகளை வாசிக்க ஆளுநர் ஆர்.என் ரவி தவிர்த்து உள்ளார். இதற்கு எதிராக ஆளுநர் இருக்கும் பொழுதே சட்டப் பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார்.

ஆளுநரை செயலுக்கு எதிராக முதல்வர் மு.க ஸ்டாலின் தீர்மானம் வாசித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் அனைவரும் வெளியேறினர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவை மரபுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது "ஆண்டின் தொடக்கத்தில் அரசு செயல்படுத்த உள்ள திட்டங்களையும், முடிவுகளையும் சட்டப்பேரவையில் சம்பிரதாயமாக அறிவிக்கும் ஒரு முறை தான் ஆளுநர் உரை என பார்க்கப்படுகிறது. ஆனால் சென்ற ஆண்டை போலவே ஆளுநர் உரையில் எந்த ஒரு புதிய திட்டங்களும் இடம்பெறவில்லை. இந்த திமுக அரசும் முதலமைச்சரும் தற்புகழ்ச்சியோடு தங்கள் முதுகை தாங்களை தட்டிக் கொள்கிறார்கள்.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் இன்றைய தினம் சற்று வித்தியாசமாக தமிழக ஆளுநர் உரையின் மூலம் தங்கள் முதுகை தாங்களே தட்டி சபாஷ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஆளுநர் உரையில் மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது" என விமர்சனம் செய்தார். அப்பொழுது செய்தியாளர்கள் ஆளுநர் ரவி தமிழக அரசு அச்சடித்துக் கொடுத்த ஊரை குறிப்பில் இடம் பெற்ற வார்த்தைகளை படிக்காமல் தவிர்ப்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி "நாங்கள் ஆளுநர் உரையை தான் கேட்க வந்தோம், முதலமைச்சர் உரையை அல்ல. ஆளுநர் உரையை ஒரு புத்தகமாக அச்சிட்டு ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கொடுத்துள்ளனர். அது முதலமைச்சருக்கும் பொருந்தும். ஆளுநரை அமர வைத்து ஒரு முதல்வர் பேசுவது மரபுக்கு எதிரானது, அநாகரிகமானது" என விமர்சனம் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS comments Cm Stalin did not know tn assembly legacy


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->