திறனற்ற அரசால் தமிழகத்திற்கே பெரும் தலைகுனிவு.. ஈபிஎஸ் கடும் கண்டனம்..!!
EPS condemned big bow to Tamil Nadu due to incompetent govt
சென்னை ஸ்டான்லி, தர்மபுரி மற்றும் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரிகளின் உள் கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி இளநிலை மருத்துவ படிப்புக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவர் கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் இத்தகைய மெத்தன போக்கிற்கு எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தர்மபுரி ஆகிய இந்த மூன்று மருத்துவக் கல்லூரிகள் தங்கள் அங்கீகாரத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதற்கு காரணமான இந்த விடியா திமுக அரசிற்கு எனது கடும் கண்டனங்கள். ஸ்டாலின் தலைமையிலான பொறுப்பற்ற இந்த அரசின் அலட்சியப் போக்கால் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு போன்ற சிறிய காரணங்களுக்காக, இந்த மூன்று மருத்துவ கல்லூரிகளில் அதிக எண்ணிக்கையில் இளங்கலை மருத்துவ இடங்களை தமிழகம் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது , இது வேதனைக்குரியது மட்டுமல்ல தமிழகத்திற்கே இது ஒரு பெரும் தலைகுனிவு.
கடந்த அம்மா ஆட்சியில் தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தபோது பொதுமக்களும் மாணவர்களும் மிகுந்த மனமகிழ்ச்சி கொண்டிருந்தனர்.
தற்போது இந்த திமுக அரசின் நிர்வாகத்திறனற்ற அரசு அவர்களின் மகிழ்ச்சியில் மண் அள்ளிப் போட்டிருப்பதை மிகுந்த வேதனையுடன் கண்டிப்பதுடன். உடனடியாக மத்திய அரசை தொடர்பு கொண்டு மீண்டும் இந்த மூன்று கல்லூரிகளுக்கும் அங்கீகாரம் பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென நிர்வாக திறன்ற்ற இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன்" என தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
English Summary
EPS condemned big bow to Tamil Nadu due to incompetent govt