மாவட்ட ஆட்சியர் மீதே வன்முறையா.. இதுவே நாங்கள் இருந்திருந்தால்..! திமுக அரசை ரவுண்டு கட்டிய ஈபிஎஸ்..!! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் தனியார் பள்ளியில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை காண பரிசளிப்பு விழாவில் திமுக அமைச்சர் ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் வேறொரு நிகழ்ச்சிக்கு பங்கேற்க செல்ல இருந்ததால் விழா முன்னதாகவே தொடங்கப்பட்டது.

இதற்கு ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ் கனி எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பனை "தொலைத்து விடுவேன்" என நவாஸ் கனி மிரட்டினார்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் சமாதானம் செய்யச் சென்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரனை தகராறு ஈடுபட்டோர் நெஞ்சில் கை வைத்து தள்ளியதால் அவர் கீழே விழுந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பட்ட மக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் ஆன எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஒரு மாவட்டத்தின் சட்டம் ஒழுங்கிற்கும், நிர்வாக அமைப்புக்கும் முழுப் பொறுப்புடையவர் மாவட்ட ஆட்சியர், அத்தகைய மாவட்ட ஆட்சியரையே உதாசீனப் படுத்தி கீழே தள்ளி விடும் அளவிற்கு இந்த ஆட்சியில் திமுகவின் வன்முறை அரங்கேற்றி வருகிறது.

மாவட்ட ஆட்சியரேயே தள்ளி விட்டவர் மீது ஏன் இன்னும் நடவடிக்கை இல்லை. இதுவே அம்மாவின் அரசாக இருந்திருந்தால் இப்படி நடைப் பெற்றிருக்குமா? எதேச்சதிகாரத்தில் தன்னிலை மறந்து தரம் தாழ்ந்து நடக்கும் இந்த அரசை மக்கள் துணை கொண்டு விரட்டியடிக்கின்ற காலம் விரைவில் வரும்" என பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS condemns Ramanat District Collector being pushed down by DMK cadres


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->