விசைத்தறி தொழிலாளர்கள் கண்ணீர் வடிக்க பொம்மை முதல்வர் தான் காரணம்.. ஈபிஎஸ் கடும் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிடக்க இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அறிமுக கூட்டம் இன்று ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்பொழுது பேசிய அவர் விடியா திமுக ஆட்சியில் விசைத்தறி தொழிலாளர்கள் கண்ணீர் வடிப்பதாக குற்றம் சாட்டினார்.

அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு அறிமுக விழாடையில் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது "ஈரோடு மாவட்ட கிழக்கு தொகுதியை பொருத்தவரை இரண்டு தொழில்கள் பிரதான தொழில்களாக உள்ளன. ஒன்று வேளாண்மை இன்னொன்று ஜவுளி தொழில். இரண்டு தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுத்த ஒரே அரசாங்கம் அதிமுக தலைமையிலான அரசாங்கம் மட்டும் தான்.

விவசாயிகளுக்கு மானியம் வழங்கியது, தமிழகம் முழுவதும் நீர் மேலாண்மை, அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்காக ரூ.1652 கோடி ஒதுக்கீ அத்திட்டத்தை நிறைவேற்றிய ஒரே அரசு அதிமுக அரசு மட்டும்தான்.

அதிமுக ஆட்சியில் விலையில்லா வேட்டி சேலைகள் கொள்முதல் செய்யப்பட்டு தமிழக முழுவதும் பொங்கலுக்கு விநியோகம் செய்யப்பட்டது. அந்தப் பணிகளை ஈரோட்டில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கைத்தறி தொழிலாளர்கள் முதல் முதலாளிகள் வரை அனைவரும் பயன் பெற்றனர்.

இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள விசைத்தறி உரிமையாளர்களுக்கு இலவச வேட்டி சேலை நெய்யும் பணியை தரவில்லை. இதன் காரணமாக விசைத்தறிகள் எல்லாம் மூடப்பட்டு விசைத்தறி தொழிலாளர்கள் எல்லாம் வேலை வாய்ப்பு இழந்து கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால் பல்லாயிரம் கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து வேறு மாவட்டங்களுக்கு சென்று விட்டனர். இந்த அவல நிலைக்கு விடியா திமுக அரசு தான் பதில் சொல்ல வேண்டும். உரிய நேரத்தில் விலையில்லா வேட்டி சேலைகள் நெய்யும் பணி வழகாததற்கு இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதல்வர் தான் காரணம்" என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS criticized stalin is reason power loom workers shed tears


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->