நத்தம் விஸ்வநாதனை அடிக்க பாய்ந்த வைத்திலிங்கம்! உண்மையை போட்டு உடைத்த தங்கமணி!
EPS decided to give the post of Joint Secretary to OPS
இணை பொதுச்செயலாளர் பதியை பன்னீர் செல்வத்திற்கு வழங்குவதாக முடிவு செய்தோம்!
நாமக்கல் மாவட்டத்தின் அதிமுக சார்பில் நடைபெற்ற கழக நிர்வாகிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமை தாங்கினார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி "ஓபிஎஸ் இருக்கு மரியாதை குறை வந்து விடக்கூடாது என்பதற்காக அதிமுகவில் இணை பொதுச் செயலாளர் பதவி வழங்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக கூறினார். அவருடைய மகனுக்கு அமைச்சர் பதவி அளிப்பதாகவும் கூறினார். அதற்குப் பின்பும் ஓ.பன்னீர்செல்வம் ஒத்துழைப்பு வரவில்லை என்றால் அதற்கு ஒரு பின்னணி இருக்கின்றது.
நாங்கள் பலமுறை பேச்சுவார்த்தைக்கு சென்று பேசியுள்ளோம். ஒருமுறை பேச்சு வார்த்தைக்கு சென்ற பொழுது வைத்தியலிங்கமும் அவருக்கு நெருங்கிய நண்பராக இருக்கின்ற முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அமர்ந்து இருந்தனர். அவர்களுக்கு எதிராக நான் உட்கார்ந்திருந்தேன். அப்பொழுது பேசிக்கொண்டு இருக்கும் போது வைத்தியலிங்கம் பெரிய சத்தமிட்டு நத்தம் விஸ்வநாதன் அடிக்க பாய்ந்தார். நாங்கள் தடுத்து சமாதானம் செய்து வெளியே அழைத்துச் வந்து விட்டோம்" என பேசி உள்ளார்.
English Summary
EPS decided to give the post of Joint Secretary to OPS