அண்ணாமலையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாத ஈபிஎஸ்..!! காரணம் என்ன..? - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று தனது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியன், புதிய நிதி கட்சித் தலைவர் ஏ.சி சண்முகம் உள்ளிட்டோர் ட்விட்டர் பதிவில் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.

அதே போன்று பாஜகவை சேர்ந்த பல மூத்த நிர்வாகிகள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. 

இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடிய தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவரும் தெலுங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜனுக்கு எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழக பாஜக நிர்வாகிகளுக்கும் அதிமுக நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த பிறகு அண்ணாமலைக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனையும் இல்லை என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்ததற்கு பிறகு இரு தரப்பினருக்கும் இடையே கருத்து மோதல் இல்லாத சூழல் நிலவி வருகிறது.

இந்த நிலையில் அதிமுக நிர்வாகிகள் யாரும் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்காமல் இருப்பது இரு கட்சியினர் இடையே உள்ள கருத்து வேறுபாட்டை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கடந்த மே மாதம் 12ஆம் தேதி பிறந்த நாள் கொண்டாடிய எடப்பாடி பழனிச்சாமிக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS did not wish Annamalai on his birthday


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->