பெரும் மனவேதனையில் எடப்பாடி கே பழனிச்சாமி.!
eps mourning to kuchipalayam accident
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி இன்று விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
"கடலூர் அருகே கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் கெடிலம் ஆற்றில் குளிக்க சென்ற அதே பகுதியை சேர்ந்த மோனிசா, சங்கவி, சுமிதா, காவியா, பிரியதர்ஷிணி, நவநீதம் மற்றும் பிரியா, ஆகிய 7 பேர் ஆழமான பகுதியில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
அவர்களை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்வதுடன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு அறிவித்துள்ள 5லட்சம் நிதியை 10லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்" என்று எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய ஒரு முக்கிய செய்தி : அரக்கோணம் அருகே பிறந்து 40 நாட்கள் ஆன ஆண் குழந்தை கழிப்பறை பக்கெட் தண்ணீரில் தலைகீழாக மூழ்கடிக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காதலித்து திருமணம் செய்து கொண்ட மனோ - அம்சா நந்தினி தம்பதிக்கு, கடந்த நாற்பது நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.
நேற்று இரவு தாயின் அருகே இந்த குழந்தை படுத்து தூங்கிய நிலையில், நள்ளிரவில் திடீரென குழந்தை காணாமல் போயுள்ளது. உறவினர்கள் குழந்தையை ஊர் முழுவதும் தேடியும், குழந்தை கிடைக்கவில்லை.
பின்னர் கழிப்பறையில் சோதித்துப் பார்த்தபோது, அங்கிருந்த பக்கெட்டில் குழந்தை தலைகீழாக மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டு கிடந்தது.
இதுகுறித்து, குழந்தையின் தாய் அம்சா நந்தினி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் குழந்தையின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் குழந்தையின் தாய் மற்றும் தந்தையிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கி உள்ளனர்.
English Summary
eps mourning to kuchipalayam accident