வழியனுப்பு விழாவில் கணவன் கண் முன்னே மரணித்த மனைவி..! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் உடல்நிலை சரியில்லாத மனைவியை கவனித்து கொள்வதற்காக ஓய்வு பெற்ற நாளில் வழியனுப்பு விழாவில்  கணவன் கண் முன்னே மரணித்த மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது 

ராஜஸ்தானின் கோட்டா நகரில் உள்ள மத்திய கிடங்கு நிறுவனத்தின் மேலாளராக பணியாற்றியவர் தேவேந்திர சாண்டல். இவருடைய மனைவியான  டீனா இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இருதய நோயாளியான டீனாவை கவனித்து கொள்வதற்காக  சாண்டல் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார்.ஓய்வு பெற  3 ஆண்டுகளுக்கு முன்பே முடிவுசெய்ததை  தொடர்ந்து, சாண்டல் ஓய்வு பெற்ற நாளில் வழியனுப்பு விழா நடந்துள்ளது. இதற்காக, மனைவியுடன் மாலையிட்டு வந்த அவர் உறவினர்கள், நண்பர்கள் சூழ அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

அப்போது சுற்றியிருந்தவர்கள் புகைப்படம் எடுக்க தயாராக இருக்கும்படி தம்பதியை கேட்டு கொண்டதையடுத்து  இருவரும் எழுந்து நின்றனர்.நிற்க மிகவும் சிரமப்பட்ட டீனா மயக்கம் வருவதுபோல் இருக்கிறது என கணவரிடம் கூறியிருக்கிறார்.அப்போதுதான்  அவரை அமர வைத்து விட்டு, தண்ணீர் கொண்டு வரும்படி கூடியிருந்தவர்களிடம் கணவர் கூறியிருக்கிறார்.

இந்தநிலையில்தான் சிலர், டீனாவை புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, டீனா முடியாமல் மேசை மீது சரிந்து விழுந்துள்ளார். இதனால், பயந்து போன கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் உடனடியாக டீனாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றநிலையில்  அவர்  வரும் வழியிலேயே டீனா உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால், விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டனர்.  உடல்நிலை சரியில்லாத மனைவியை கவனித்து கொள்வதற்காக ஓய்வு பெற்ற நாளில் வழியனுப்பு விழாவில்  கணவன் கண் முன்னே மரணித்த மனைவி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த காட்சி அடங்கிய வீடியோ பார்ப்பவர்களை கண் கலங்க வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Wife dies in front of husband at farewell party


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->