பிப்ரவரியில் அறிவிப்பாங்க.. தயாராக இருங்க... அதிமுக தொண்டர்களுக்கு ஈபிஎஸ் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஓமலூர் திண்டமங்கலம் பகுதியில் பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு 108 பானைகளில் வைக்கப்பட்ட பொங்கலை கண்ணனூர் மாரியம்மனுக்கு படையல் இட்டு வழிபட்டார்.

பின்னர் அதிமுக தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வாழ்த்து உடன் தனது பேச்சை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி "தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல் இந்த ஆண்டு நாட்டு மக்களுக்கு நல்ல வழி பிறக்கும்.

இரவு பகல் மழை வெயில் என்று பாராமல் நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கும் விவசாய மக்களின் உன்னதமான நாள் தைதிருநாள். நானும் ஒரு விவசாயி, எனது இல்ல நிகழ்ச்சியாக இதை பார்க்கிறேன். எனது குடும்பத்தினர் பொங்கல் கொண்டாடி வரும் அதே நேரத்தில் உங்களுடன் நான் உங்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறேன்.

இந்த இரண்டரை ஆண்டு திமுக ஆட்சியில் மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? மக்களுக்கு அவர்கள் என்ன செய்தார்கள்? கொள்ளை அடித்ததுதான் அவர்களின் சாதனை. முப்பதாயிரம் கோடி ரூபாய் கொள்ளை அடித்து சம்பாதித்த பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் உதயநிதியும் சபரி நேசனம் உள்ளனர் என்று திமுக அமைச்சர் ஒருவரே கூறியுள்ளார்.

கொள்ளையடித்து ஆட்டம் போட்டவர்கள் சிறையில் உள்ளனர். இன்னும் சிலர் சிறைக்குச் செல்ல உள்ளனர். ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி மோசமான ஆட்சியாக மக்கள் நினைக்கின்றனர் இந்த ஆட்சியை எப்போது அகழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் விடியா அரசுக்கு பாடம் புகுத்த வேண்டும்.

இந்த தேர்தலில் விடிய அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் ஸ்டாலின் முதல்வராக இருக்கலாம் சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. பிப்ரவரி மாதத்தில் தேர்தல் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்படலாம் நமது கட்சியினர் எப்போதும் தயாராக இருந்து தேர்தல் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்" என கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eps order to cadres to be ready for election 2024


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->