தனபாலின் பேச்சுக்கு தடை வருமா? ஈபிஎஸ் தாக்கல் செய்த மனு செப்.19-ல் விசாரணை! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கார் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபால் சமீபத்தில் அந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு அவர் தொடர்ந்து பேட்டி அளித்து வருகிறார்.

இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி ஏற்ற உள்ள நிலையில் தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் தனபால் பொய்யான தகவலை தொடர்ந்து கூறி வருகிறார். 

நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுகவுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கை குலைக்கும் நோக்கத்தில் தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால் தனபால் இதுபோன்று பேட்டி அளித்து வருகிறார்.

கொடநாடு வழக்கில் சாட்சிகளை கலைத்ததாக கைது செய்யப்பட்ட தனபால் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி ஜாமீன் பெற்றவர். இவர் கடந்த 2017 செய்தியாளர்களை சந்தித்தபோது என்னுடைய தம்பி கனகராஜ் எங்கள் வீட்டில் இருந்து எங்கள் சித்தி வீட்டிற்கு வந்தார் எனவும், குழந்தை பிறந்தநாள் பார்க்க வந்தார் எனவும், காரை அங்கு விட்டுவிட்டு பைக்கில் வந்தார் எனவும் கூறியுள்ளார். 

ஆனால் கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி அளித்த பேட்டியில் அப்படியே முன்னுக்கும் பின் முரணாக பொய்யான தகவலை கூறியுள்ளார். எனவே கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் தன்னை தொடர்பு படுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அவர் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவிட வேண்டும் எனவும் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிமன்ற பதிவாளரால் பட்டியலிடப்பட்டு வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா அமர்வின் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS petition against Dhanapal will be heard on Sept1


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->