#Breaking || நேரடியாக மோத திராணியற்ற திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன் - இபிஎஸ் கொந்தளிப்பு.! - Seithipunal
Seithipunal


வேண்டுமென்றே திட்டமிட்டு தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்துவதாக, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அவர் தெரிவிக்கையில், "முன்னாள் அமைச்சர் தங்கமணி அவர்களின் இல்லத்தில் தற்போது ரைடு நடந்து கொண்டிருக்கிறது.

இது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு நடத்தப்படும் ஒரு ரைடு ஆகும். 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை நேரடியாக எதிர்க்க திராணியற்ற திராவிட முன்னேற்றக் கழகம், குறுக்கு வழியில் அடியாட்களை பயன்படுத்தி, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் மூலமாக இன்றைக்கு முன்னாள் அமைச்சர்கள் அவர்களின் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் ரைடு நடத்துகிறது.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத திமுக அரசு அதனை திசை திருப்பவே முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரைடு நடத்துவதை வழக்கமாக மாற்றிவிட்டார்கள்.

சகோதரர் தங்கமணி உறவினர்கள், நண்பர்களின் வீட்டில் நடைபெறக்கூடிய ரைடு வன்மையாக கண்டிக்கத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps say about thangamani home raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->