மு.க ஸ்டாலினுக்கு "நோபல் பரிசு" வழங்கலாம்.. பங்கம் செய்த ஈ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ஏஎல். விஜயனை ஆதரித்து நேற்று அரக்கோணம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி "முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டமிட்டு பொய் பேசி வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் பொய் மட்டுமே பேசி வருகிறார். அவருக்கு பொய் பேசுவதற்கான நோபல் பரிசு வழங்க வேண்டும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற பொது தேர்தலின் போது 520 வாக்குறுதிகளை கொடுத்தனர் அதில் 10 சதவீதம் கூட நிறைவேற்ற வில்லை. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது ஸ்டாலின் எப்படி அமைச்சரானோ அவ்வாறு தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். இந்த மாநிலம் அந்த குடும்பத்தின் சொத்தாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால் என்னை மிரட்டி பார்க்கலாம் என்று நினைத்தால் அது தவறு. முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உட்பட உலகிற்கே உணவு வழங்குவது சாதாரண விவசாயிகள் தான். 

ஆட்சிக்குப் பொறுப்பேற்ற 2.5 ஆண்டுகளில் திமுக அரசு 3 லட்சம் கோடி ரூபாய் கடனை தமிழக மக்கள் தலையில் ஏற்றி உள்ளது. ஆனால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சைக்கிள் பயணம் செய்வது உடற்பயிற்சி செய்வது என பிசியாக இருக்கிறார். இதற்காம்போ தமிழக மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Eps say Stalin can be given Nobel prize for telling lies


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->