அனல் பறக்கும் பிரசாரம்... இன்று முதல்.. கோதாவில் குதிக்கும் ஈபிஎஸ்.!!
EPS starts loksabha election campaign in Trichy by today
நாடாளுமன்ற மக்களவைக் காண தேர்தல் நாடும் முழுவதும் ஏழு கட்டணங்களாக நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் முதற்கட்ட வாக்குப்பதிவியிலேயே தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு போக அதிமுக நேரடியாக 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

அதேபோன்று திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்க போக திமுக நேரடியாக 21 தொகுதிகளில் களம் காண்கிறது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேற்று தனது தேர்தல் பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கியுள்ள நிலையில் இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
அரசியல் கட்சிகளுக்கு திருப்பம் தரும் திருச்சியில் இருந்து இன்று தனது தேர்தல் பிரச்சாரத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார். இனி வரும் நாட்களில் தேர்தல் அரசியல் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
EPS starts loksabha election campaign in Trichy by today