அதிமுக கூட்டணியில் தேமுதிக.? உண்மையை போட்டுடைத்த ஈபிஎஸ்.!! - Seithipunal
Seithipunal


திருச்சி முசிறி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த பின்ஸ் தங்கவேல் அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நாடாளுமன்ற பொது தேர்தல் கூட்டணி மற்றும் தேமுதிகவுடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர் "அதிமுக தலைமையில் வரும் நாடாளுமன்ற பொது பொது தேர்தலுக்கு வலுவான கூட்டணி அமைக்கப்படும். இன்னும் நாடாளுமன்ற பொது தேர்தலை அறிவிக்கவில்லை. தற்போது தான் கேப்டன் விஜயகாந்த் மறைந்துள்ளார். அவருடைய குடும்பத்தார் தொண்டர்களும் வேதனையில் உள்ளனர். தேர்தல் அறிவிக்கின்ற காலகட்டத்தில் எந்தெந்த கட்சியோடு கூட்டணி என்பது தெரிவிக்கப்படும். அதிமுக தலைமையில் ஒரு வலிமையான கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் அதிமுக தலைமை கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்" என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eps talk about DMDK in AIADMK alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->