#BREAKING : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி.! - Seithipunal
Seithipunal


இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில், ஆரம்பம் முதலே திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வந்தார். மற்ற வேட்பாளர்கள் தொட முடியாத அளவுக்கு அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

இந்த நிலையில் 15 சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்றுள்ளார். இதன் மூலம் 66,397 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதில் அதிமுக வேட்பாளரை தவிர மற்ற வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 15 சுற்றுகளின் முடிவில் நிலவரம் 

காங்கிரஸ் (திமுக) -1,10,556

அதிமுக - 43,981

நாதக - 7984

தேமுதிக -1115


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode by election EVKS Elangovan victory


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->