ஓபிஎஸ் தரப்பில் இரு வேட்ப்பாளர்கள்! வெளியாகிறது அறிவிப்பு!
Erode East By Election OPS Side Candidate announce ingo 31012023
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாஜக இன்று முடிவு தெரியாவிட்டால், உடனடியாக வேட்பாளரை களமிறக்க ஓபிஎஸ் முடிவு செய்துள்ளார் என்று, ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான கு.ப கிருஷ்ணன் தகாவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே வெளியான ஒரு பரபரப்பு தகவலின்படி, மக்கள் மத்தியில் அறிமுகம் உள்ள வேட்பாளராக இருக்க வேண்டும் என்று ஓபிஎஸ் முடிவெடுத்து உள்ளார். இதன் எதிரொலியாக அண்ணா திமுக நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் கலை உலக வாரிசு என்று அழைக்கப்பட்ட கே. பாக்யராஜ்க்கு, கோபிசெட்டிபாளையம் தான் சொந்த ஊர்.
கலையுலகில் ஒரு புரட்சி ஏற்படுத்தி தனி முத்திரையை பதித்தவர் எனவே அவரை நிறுத்துவது அல்லது அண்ணா திமுக கொள்கை பரப்பு செயலாளராக உள்ள புகழேந்தியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
புகழேந்தியை பொறுத்தவரை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளதாலும், முன்னாள் முதல்வர் அம்மா அவர்களுக்கு தனது சொத்துக்களை பிணையாக வழங்கியவர் என்பதாலும், சிறந்த பேச்சாளர் என்பதாலும், தொலைக்காட்சி விவாதங்களிலும், பேட்டிகளிலும் பேசி பொதுமக்கள் பாராட்டுகளை பெற்று வருவதாலும், இவரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. எனவே பாக்கியராஜா? புகழேந்தியா? என முடிவு செய்து ஓபிஎஸ் அறிவிக்க உள்ளார்" என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மாவட்ட செயலாளர்கள் முருகானந்தம், கோவிந்தன், மாவட்ட துணை செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்டவர்களின் பெயர்களும் அடிபடுவதாக சொல்லப்படுகிறது.
English Summary
Erode East By Election OPS Side Candidate announce ingo 31012023