நாள் குறித்த எடப்பாடி பழனிச்சாமி?! உற்சாகத்தில் அதிமுக தொண்டர்கள்! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. ஆளும் திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி சார்பில் இவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.

இவருக்கு கடுமையான போட்டியாக எதிர்க்கட்சி தரப்பில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு களமிறக்கப்பட்டுள்ளார். மேலும் நாம் தமிழர் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் இந்த இடைத்தேர்தலில் களம் இறங்கி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி வரும் 12-ந்தேதி முதல் பிரசாரம் தொடங்க உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தொடர்ந்து 5 நாட்கள் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்யப்போகும் எடப்பாடி பழனிச்சாமி, தேர்தலுக்கு முந்தைய 2 நாட்களிலும் பிரசாரம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 

* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25 தேர்த்திகளில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். 
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதனை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகிற 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை பிரசாரம் செய்கிறார். 
* தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த்தை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் 12-ந் தேதி பிரசாரம் செய்வதாக இருந்த நிலையில், திடீரென அது ஒத்திவைக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode East By Poll ADMK Edappadi Palaniswami Election Campaign 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->