அதிமுகவிற்கு முழு ஆதரவு | எடப்பாடி பழனிசாமிக்கு குவியும் ஆதரவு!
Erode East By Poll ADMK EPS
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சிறப்பாக போட்டியிடும் வேட்பாளர் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை பாஜகவிற்கே தங்களது ஆதரவு என்றும், ஓபிஎஸ், இபிஎஸ்.,க்கு இல்லை என்றும் அறிவித்துள்ளன.
ஓபிஎஸ்-யை பொறுத்தவரை, இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டால் ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஓபிஎஸ் தரப்பு போட்டியிட்டால் தனியரசு கட்சி ஆதரவு அழிக்கும் என்று தெரிவித்துள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவிற்கு தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல கூட்டணி கட்சிகள், அமைப்புகள் ஆதரவு கரத்தை நீட்டி வருகின்றன.
இன்று ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு (எடப்பாடி பழனிசாமி தரப்பு) தேசிய புலிகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாடார் மற்றும் அருந்ததிய அமைப்பினர், அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு (எடப்பாடி பழனிசாமி தரப்பு) தேசிய புலிகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்கள் கே எஸ் செங்கோட்டையன், எஸ்பி வேலுமணி, பி தங்கமணி ஆகியோரை நேரில் சந்தித்து தேசியப் புலிகள் கட்சி தலைவர் குணசேகரன் தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
English Summary
Erode East By Poll ADMK EPS