கருணாநிதிக்கு வைக்கும் பேனா சிலையால் மக்களுக்கு என்ன பயன்? நாதக வேட்பாளர் சரமாரி கேள்வி!
Erode East Byelection Naam Tamilar Katchi
கருணாநிதிக்கு வைக்கும் பேனா சிலையால் மக்களுக்கு என்ன பயன்? என்று, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தின் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "ஈ.வே.ரா.வின் மண், பெண்ணியம் பேசக்கூடிய மண் என்றும் சொல்லும் திராவிட கட்சிகளில் பெண்களுக்கு முன்னுரிமை, சம வாய்ப்பு வழங்குவதில்லை.
நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. நாள் போட்டியிடும் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் சாயப்பட்டறை கழிவுகளால் குடிநீரே இப்போது நஞ்சாக மாறியிருக்கிறது. மஞ்சள் மாநகரம் இப்போது கேன்சர் மாநகரமாக மாறி வருகிறது.
எங்களுக்கு அதிகாரம் வந்தால், மக்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய தொழிற்சாலைகளை இழுத்து மூடுவோம். வடமாநில தொழிலார்கள் மக்கள், பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியவில்லை.
![](https://img.seithipunal.com/media/erode ntk candidate.png)
பேனா விவகாரத்தில் அண்ணன் சீமான் சொல்வது போல, கடலுக்கு நடுவில் பேனாவைக் வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்? அவரின் நினைவாக ஒரு உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை அமைத்து கொடுங்கள்.
இல்லை ஒரு பள்ளிக்கூடம் அமைத்துகொடுக்கலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு பேனாவைத்தான் வைப்பேன், கடலில்தான் அதை வைப்பேன் என்றல் கோபம் வரத்தான் செய்யும். பேனா சின்னம் வைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம்" என்று, தெரிவித்துள்ளார்.
English Summary
Erode East Byelection Naam Tamilar Katchi