ஈரோடு கிழக்கு: திமுகவிற்கு வாக்களியுங்கள் - நடிகர் வேண்டுகோள்!
Erode East Bypoll karunas DMK
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "திராவிட மாடல் அரசின் மக்கள் வரவேற்பை யாவரும் அறிவர். திமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் வழியாக எடுத்துச் சென்றுள்ளோம்.
ஆகவே 5ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்குரிய வாக்குப் பதிவில் நாம் கூட்டணி கட்சியாக அங்கம் வலிக்கும் திழக வேட்பாளர் சந்திரகுமார் அவர்களுக்கு உதய குரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து மக்கள் முதல்வர், மு.க.ஸ்டாலின் அவர்களது கரத்தை வலுப்படுத்த
மறவாது வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று நடிகர் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
English Summary
Erode East Bypoll karunas DMK