அனுமதியின்றி திருமண மண்டபத்தில் அதிமுகவினர் செய்த செயல்... இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்.!
Erode marriage hall closed by election commission
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினரான ஈவேரா கடந்த ஜனவரி 4-ல் மாரடைப்பால் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தற்போது வரும் பிப்ரவரி 27 இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் இரண்டில் நடைபெற உள்ள நிலையில் கடந்த ஜனவரி 31 முதல் பிப்ரவரி 7 வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரமானது துவங்கியுள்ளது.
இந்த நிலையில், தற்போது ஈரோடு அருகே கிருஷ்ணன்பாளையத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அனுமதி பெறாமல் அந்த தனியார் திருமண மண்டபத்தில் அதிமுகவினர் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக புகார் எழுந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புகாரை தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள் அந்த மண்டபத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்கிருந்த அதிமுகவினரை வெளியேற்றிவிட்டு மண்டபத்தை இழுத்து மூடி சீல் வைத்துள்ளனர்.
English Summary
Erode marriage hall closed by election commission