அதிமுக போட்டியிடாது... பாஜகவை வீழ்த்துவது எளிது... ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நம்பிக்கை..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை காங்கிரஸ் தலைமை நேற்று அறிவித்துள்ளது. மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளார். இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்த இளங்கோவன் பேசியதாவது "என் மீது நம்பிக்கை வைத்து காங்கிரஸ் மேலிடம் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளது. எனது இளைய மகன் சஞ்சய் சம்பத்தை வேட்பாளராக அறிவிக்குமாறு கோரிக்கை வைத்திருந்தேன். ஆனால் என் மீது இருக்கும் நம்பிக்கையில் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர். இதற்காக நான் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கிய திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கும் நன்றி.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியை அடைவேன். இந்த இடைத்தேர்தலில் அதிமுகவில் இருக்கும் 4 அணிகளுமே போட்டியிடாது என்று நான் கருதுகிறேன். நிச்சயம் பாஜக வேட்பாளரை நிறுத்தும் என நினைக்கிறேன். அவ்வாறு பாஜக வேட்பாளரை நிறுத்தினால் நிச்சயம் திமுக கூட்டணி வெல்லும். காங்கிரஸ் மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் சீட் கேட்டதில் எந்த தவறும் இல்லை. போட்டியிட வாய்ப்பு கேட்க அவருக்கு முழு உரிமை உள்ளது. இருந்தாலும் அழுததை தவிர்த்து இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS elangovan said AIADMK will not contest in Erode East


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->