நான் இல்லை.. என் இளைய மகன் சஞ்சய் தான்... உறுதிப்படுத்திய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்...!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைந்ததை அடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து வரும் பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் கடந்த சட்டமன்ற பொது தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்பொழுது நிலவி வருகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பம் தெரிவித்ததாக பரவலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேசியதாவது "காங்கிரஸ் தலைமை யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அதை நான் ஏற்றுக் கொள்வேன். இளைஞர் ஒருவருக்கு தான் காங்கிரஸ் தலைமை வாய்ப்பு வழங்க வேண்டும். ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. எனது இளைய மகன் சஞ்சய்க்கு வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளேன். வேட்பாளர் யார் என்பது காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும்" என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார். இதன் மூலம் சஞ்சய் இளங்கோ ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EVKS said he asked for Sanjay to chance in Erode East byelection


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->