35 பேரை கொலை செய்த வழக்கு..முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
Murder of 35 people Elderly man sentenced to death
மக்கள் கூட்டத்துக்குள் காரை தறிகெட்டு ஓட விட்டு 35 பேரை கொலை செய்த வழக்கில் சீனாவில் முதியவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் செய்யப்பட்டது.
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்தவர் 62 வயதான முதியவர் பென் வெய்கியு . இவர் கடந்த நவம்பர் மாதம் ஜுஹாய் நகரில் உள்ள ஒரு மைதானம் அருகே காரில் சென்றபோது.சாலை ஓரம் உள்ள மைதானம் அருகே ஏராளமானோர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.
அப்போது 62 வயதான முதியவர் பென் வெய்கியு அந்த காரை மக்கள் கூட்டத்துக்குள் தறிகெட்டு ஓட செய்தார் . இதனால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறி ஓட்டம் பிடித்தனர். எனினும் இந்த விபத்தில் 35 பேர் கொல்லப்பட்டனர்.இந்த சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது,
இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார் வெய்கியுவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதுதொடர்பான வழக்கில் கடந்த மாதம் வெய்கியு அவருக்கு மரண தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தண்டனையை கோர்ட்டு தற்போது நிறைவேற்றி உள்ளது.
English Summary
Murder of 35 people Elderly man sentenced to death