பரபரப்பு!...முதலமைச்சர் இல்லத்தில் இருந்து நாளை அரவிந்த் கெஜ்ரிவால் வெளியேற்றம்? - Seithipunal
Seithipunal


டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.


இதையடுத்து 6 மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 13ம் தேதி திகார் சிறையில் இருந்து விடுதலையானார். இதனை தொடர்ந்து 15ம் தேதி ஆம் ஆத்மி நிர்வாகிகள் மத்தியில் பேசிய கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியைராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார்.

மேலும் தன்னை மக்கள் நேர்மையானவன் என்று சொல்லும்வரை முதலமைச்சர் பதவியை ஏற்க மாட்டேன் என்றும் கூறிய அவர், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடத்தப்பட்டு புதிய முதலமைச்சர்  தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் கூறினார்.

இதையடுத்து டெல்லியின் புதிய முதலமைச்சராக தற்போது அதிஷி பதவி வகித்து வருகிறார்.

இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் தனது அதிகார்ப்பூர்வ இல்லத்தில் இருந்து நாளை வெளியேறுவார் என்று ஆம் ஆத்மி கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி தலைமையகத்திற்கு அருகில் உள்ள பஞ்சாப் மாநிலங்களவை எம்பி அசோக் மிட்டலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தனது குடும்பத்துடன் நாளை குடியேற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Excitement arvind kejriwal eviction from the chief minister house tomorrow


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->