இனி தமிழகம் முழுவதும்., தமிழக மக்களே உஷார்., சற்றுமுன் தமிழக அரசு பிறப்பித்த அதிரடி அரசாணை.!
face mask fine 500
தமிழகம் முழுவதும் பொது இடங்களில் முகக்கவசம் அணிய அவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று, தமிழக அரசு சற்றுமுன்பு அரசாணை பிறப்பித்துள்ளது.
கொரோனா நோய் பரவலை தடுக்கும் விதமாக இருக்கக்கூடிய முக்கிய காரணிகளில், அனைவரும் முக கவசம் அணிந்து வெளியே செல்வது ஆகும். எனவே தற்போது தமிழ்நாட்டில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசு சற்றுமுன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், வீட்டை விட்டு வெளியே வரும்போது, பொது இடங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.
அப்படி முக கவசம் அணியாதவர்களுக்கு 200 ரூபாய்க்கு பதிலாக இனி 500 ரூபாய் அபராதமாக வசூல் செய்யப்படும்.
மேலும் கவசம் அணிந்தவர்கள் மூக்கு, வாய் சரியாக பாதுகாக்கும் வகையில் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.