கங்கனா விவகாரம் : பெண் காவலருக்கு ஆதரவாக விவசாயிகள் பேரணி! - Seithipunal
Seithipunal


பாஜகவின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து வருடக் கணக்கில் போராடிய பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று பாஜகவின் மண்டி தொகுதி எம். பி. யான கங்கனா ரனாவத் கொச்சைப்படுத்தி பேசினார். இதன் காரணமாக சண்டிகர் விமான நிலையத்தில் பெண் காவலர் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு கங்கனாவை கன்னத்தில் அறைந்தார்.

அந்த காவலர் ஒரு ஆளும் அக்கட்சி எம். பி. யை பொது வெளியில் கன்னத்தில் அறைந்த சம்பவம் நாடு முழுவதும் பூதாகாரமாக வெடித்தது. இதையடுத்து உடனடியாக கங்கனாவை கன்னத்தில் அறைந்த அந்த பெண் காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

மேலும் ஒரு எம். பி. யை கன்னத்தில் அறைந்ததாக கூறி கைதும் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து பஞ்சாப் விவசாய சங்கங்கள் அந்த பெண் காவலர் குல்விந்தர் கவுருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் இவ்வழக்கு நேர்மையாக விசாரிக்கப் பட வேண்டும் என்றும், இதில் குல்விந்தருக்கு ஏதேனும் தீங்கு இழைக்கப்பட்டால் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் இன்று மொஹாலியில் உள்ள காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பஞ்சாப் விவசாயிகள் பேரணியாக சென்றனர். இதையடுத்து கங்கனா பஞ்சாப் விவசாயிகள் அனைவரும் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று பேசியுள்ளதால் அவர் மீதும் FIR பதிவு செய்யப்பட வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmer Rally in Mohali On Behalf Of Kangana Ranaut Issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->