பஞ்சாப் முதல்வர் பதவி ஏற்றவுடன் முதல் கையெழுத்து.. மகிழ்ச்சியில் இளைஞர்கள்.!
First signature after the inauguration of the Chief Minister of Punjab
சமீபத்தில் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை வீழ்த்தி முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி அங்கு ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் முதல்வராக பகவத்சிங் மான் பதவியேற்றார்.
அவர் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது முதல் கையெழுத்தாக 25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் படித்த இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல் கட்டமாக 25 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்குவதற்கான ஆணையில் முதலமைச்சர் கையெழுத்திட்டுள்ளார். தற்போது இவரது இந்த அதிரடி அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
English Summary
First signature after the inauguration of the Chief Minister of Punjab