நாமக்கல் அருகே கோர விபத்து!...தனியார் பேருந்து-லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சோகம்!
Horrible accident near namakkal tragedy 3 people died in a collision between a private bus and a truck
நாமக்கல் அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதிய கோர விபத்தில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், மெட்டாலா பகுதி அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. மொத்தம் இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்ததாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து
மெட்டாலா கோரையாற்று பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிரே வேகமாக வந்த லாரி ஒன்று பேருந்து மீது மோதியது. இந்த கோர விபத்தில் லாரி மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், பேருந்தில் பயணம் செய்த பெண் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்புக்குழுவினரின் உதவியோடு ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் மதிவேந்தன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்
English Summary
Horrible accident near namakkal tragedy 3 people died in a collision between a private bus and a truck