ஒரே குடும்பத்தில் இருந்து ஒரே நேரத்தில் 5 எம். பி. க்கள் - யாருடைய குடும்பம் என்று தெரியுமா?
Five MPs Selected From One Family
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி காங்கிரசின் இந்தியா கூட்டணி வெற்றிக்கு மிக அருகில் வந்து பாஜகவிற்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. குறிப்பாக பாஜகவின் அசைக்க முடியாக கோட்டை என்று கருதப்படும் உத்திரப்பிரதேசத்திலேயே இந்தியா கூட்டணியின் கைகள் தான் ஓங்கி இருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சி 37 இடங்களை வென்றுள்ளது. மேலும் காங்கிரஸ் கட்சி 6 இடங்களை கைப்பற்றியுள்ளது. இதில் ஒரு பெரும் சுவாரசியமாக சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ்வுடன் அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
கன்னோஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ், பாஜக வேட்பாளரை எதிர்த்து 1 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மேலும் அவரது மனைவி டிம்பிள் யாதவ் மணிப்புரி தொகுதியில் பாஜக வேட்பாளருக்கு எதிராக 2 லட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
மேலும் அகிலேஷ் யாதவின் உறவினர்களான அக்ஷய் யாதவ், தர்மேந்திர யாதவ், ஆதித்ய யாதவ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் எம். பி. யாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்திற்குச் செல்லவுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
English Summary
Five MPs Selected From One Family