ஒரே வாரத்தில்.. ஒய்.எஸ்.ஆர்.,க்கு முழுக்கு போட்ட அம்பதி ராய்டு.!
Former cricketer Ambati Rayudu quits YSR Congress party
ஆந்திராவை சேர்ந்தவரான அம்பதி ராயுடு அங்கு ஆளும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியால் ஈர்க்கப்பட்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைய கூடும் தகவல்கள் சில மாதங்களாக வலம் வந்த நிலையில் அவ்வாறே ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் கடந்த வாரம் இணைந்தார். விஜயவாடாவில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அம்பதி ராயுடு தற்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள நிலையில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இதற்கிடையியே முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார். அம்பதி ராயுடு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒரே வாரத்தில் விலகியுள்ளார். சிறிது காலம் அரசியலில் இருந்து விலகி இருக்கப் போவதாக அம்பதி ராயுடு அறிவித்திருப்பது ஆந்திர அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
English Summary
Former cricketer Ambati Rayudu quits YSR Congress party