மணிப்பூர் சம்பவம் எதிரொலி.. பாஜகவில் இருந்து முக்கிய புள்ளி விலகல்.!! - Seithipunal
Seithipunal


பாஜகவுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் அறவே இல்லை என முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் புதுச்சேரி கண்ணன் அறிவிப்பு.!!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "கடந்த மே மாதம் மணிப்பூர் மாநிலத்தில் நடந்தேறிய பெண்களுக்கு எதிரான மிகவும் அவமானகரமான செயல் இந்தியர்களை மட்டுமல்ல உலக மக்களின் மனசாட்சியை உலுக்கி பெரிய கேவலமான நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம். இந்த குரூரமான செயலுக்கு எவ்விதமான சாக்குப் போக்கும் சொல்லாமல் மணிப்பூர் மாநில அரசும் மத்திய அரசும் இந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்றுக் கொண்டு முடிந்த வரை அதை சீர் செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

மணிப்பூர் முதலமைச்சரை அந்த பதவியில் இருந்து நீக்கி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். மணிப்பூர் பெண் குளத்துக்கு இழைக்கப்பட்ட இந்த மாதிரியான கொடூரம் எந்த வகையான மற்ற குற்றங்களுடன் ஒப்பிடவே கூடாது, முடியாது. ஏனென்றால் இந்த சம்பவம் பொதுமக்களுக்கு இரண்டரை மாதங்கள் கழித்து தான் தெரிய வந்துள்ளது.

இந்த இரண்டரை மாதம் என்பது பல விசாரணைக்கும் கேள்விகளுக்கும் பதில் அளிக்க வேண்டிய ஆட்சியாளர்களின் கடமை. இந்த கொடுமையை கண்டிக்க எந்த வார்த்தையும் எனக்கு கிடைக்கவில்லை. 

காட்டுமிராண்டித்தனமான மனித குலத்துக்கு குறிப்பாக பெண் குளத்திற்கே இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி, கொடூரம், குரூரம். மனசாட்சி உள்ள யாரும் இதை கடுமையாக கண்டிக்காமல் இருக்க முடியாது. இது சம்பந்தமாக என்னுடைய கடுமையான கண்டனங்களை மத்திய பாஜக அரசுக்கும் மணிப்பூர் மாநில அரசுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிகாரப்பூர்வமாக இப்போது நான் அறிவிக்க விரும்புவது பாஜகவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் தொடர்பும் அறவே இல்லை என்பதே. மக்களுக்கான எனது பணியும் போராட்டமும் என்றும் தொடரும்" என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former MP Kannan quit BJP due to Manipur incident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->