முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவுதினத்தை முன்னிட்டு அவர் நினைவிடத்தில் குடியரசுத்தலைவர், பிரதமர் மலர்தூவி மரியாதை  .!  - Seithipunal
Seithipunal


முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மூன்று முறை நாட்டின் பிரதமர் பதவியை வகித்த பெருமை உடையவர் . முன்னாள் பிரதமர் வாஜ்பாய் 1996-ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்றார்.  ஆனால்  அவரது ஆட்சி பதின்மூன்று  நாட்களில் கவிழ்ந்தது. 

அதன்பின்னர், 1998 முதல் 1999 வரையிலான பதின்மூன்று  மாதங்களுக்கு மீண்டும் பிரதமராக பதவி வகித்துள்ளார். இதன் பின்பு 3-வது முறையாக 1999-ம் ஆண்டு பிரதமர் பதவியேற்ற வாஜ்பாய் தனது பதவி காலம் முழுவதும் நிறைவு செய்துள்ளார்.

 பாரதிய ஜனதா கட்சியை  சேர்ந்த அவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந்தேதி தனது 93 வயதில் காலமானார்.  அவரது நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது . 

இந்த தினத்தை  முன்னிட்டு டெல்லியில் அமைந்துள்ள சதைவ் அடல் நினைவிடத்தில், நாட்டின் குடியரசுத்தலைவர்  திரவுபதி முர்மு மற்றும் துணை குடியரசுத்தலைவர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோரும்  மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

இதைத்தொடர்ந்து , மத்திய அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வளர்ப்பு மகளான நமீதா கவுல் பட்டாச்சார்யாவும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

former Prime Minister Vajpayee memorial day President and the Prime Minister stributes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->