துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற மசோதா தேவை இல்லாதது - சொன்னது யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் அதிகாரத்தில், ஆளுநர் தலையீடு செய்யும் போக்கு, அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக ஆளும் கட்சி தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனத்தை ஆளுநர் மேற்கொள்ளும் முறையை மாற்றி, தமிழ்நாடு அரசே அந்த நியமனங்களை மேற்கொள்ளும் என்ற மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், துணை வேந்தர்கள் நியமன மசோதா குறித்து முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

அதில், "துணை வேந்தர்களை மாநில அரசே நியமனம் செய்ய வேண்டும் என்ற மசோதா தேவை இல்லாதது. துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசியல் குறுக்கீடுகள் இருக்கக் கூடாது.

தமிழக ஆளுநரை பிடிக்கவில்லை என்ற காரணத்திற்காவே இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வியின் தரத்தை உயர்த்த மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறது. துணை வேந்தர்களை முதலமைச்சர் நியமித்தால் 100%அரசியல் தலையீடு வந்துவிடும்" என்று முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Vice Chancellor Balakurusamy


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->